ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

“மீண்டும் பள்ளிக்குச் செல்ல 16,800 மாணவர்களுக்கு எம்.பி.ஐ. உதவி”

சுபாங், ஜன 22- இவ்வாண்டு மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தை அமல்படுத்துவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் 16 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த பற்றுச் சீட்டுத் திட்டத்தின் வழி 16,800 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் என்று எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால்  நோர் கூறினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியுடைய மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த தலா 300 மாணவர்கள் இந்த உதவியைப் பெறுவதற்கு ஏதுவாக இப்பற்றுச் சீட்டுகள் அனைத்து 55 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த பற்றுச்சீட்டுகள் அனைத்து 56 தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு விட்டன. இவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்கும் பணி மார்ச் மாதம் முற்றுப் பெறும் என அவர் தெரிவித்தார்.

இலவச இணைய தரவு சேவை, சிலாங்கூர் டியூஷன் ராக்யாட், தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல போக்குவரத்து கட்டணக் கழிவு, மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டம், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உபசரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு கூறியிருந்தார்.


Pengarang :