ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நான்கு நாட்களில் 462 பேரிடம் டெல்டா வகை தொற்று பரவல் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், ஜன 23- இம்மாதம் 19 ஆம் தேதி முதல் இதுவரை 462 கோவிட்-19 நோய்த் தொற்றின் டெல்டா வகை திரிவுகள் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மலேசிய சரவா பல்கலைக்கழக சுகாதார மற்றும் தொடர் ஆராய்ச்சிக் கழக்கத்தில் 278 பேரும் ஜீனோம் மற்றும் தடுப்பூசி கழகத்தில் 155 பேரும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் 18 பேரும் மலாயா பல்கலைக்கழக மருத்துவ புலத்தில் 11 பேரும் இந்நோய்த் தொற்றைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இதன் வழி வி.ஒ.சி. எனப்படும் அச்சமூட்டும் தொற்றுகள் மற்றும் வி.ஒ.ஐ. எனப்படும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தொற்றுகளின் எண்ணிக்கை 6,894 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவற்றில் 6,874 தொற்றுகள் வி.ஒ.சி. வகையையும் 20 தொற்றுகள் வி.ஒ.ஐ. வகையையும் சேர்ந்தவையாகும். வி.ஒ.சி. தொற்றுகளில் 6,188 டெல்டா திரிவுகளாகும். இது தவிர ஒமிக்ரோன் திரிபுகளின் எண்ணிக்கை 439 ஆகவும் பேட்டா திரிவுகளின் எண்ணிக்கை 233 ஆகவும் அல்பா திரிவுகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது.


Pengarang :