ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்திற்கான பலவீனங்களை களைவதற்கு வழி காணுங்கள்- மந்திரி புசார்  வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 24- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

மாறாக, நாடு முழுவதும் வெள்ள மேலாண்மையில் காணப்படும் பலவீனங்களை ஒரு படிப்பினையாக கொண்டு அதனை சரி செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பில் பல தரப்பினர் குறை கூறினாலும் அதனால் (வெள்ளப்) பிரச்சனைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை. தவறான மாநிலத்தை, தவறான, இடத்தை, தவறான மாவட்டத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் என்றார் அவர்.

உத்தரவு பிறப்பிக்க முடியாத போது அதனை சரி செய்யாமல் மற்றவர்களைக் குறை கூறுகின்றனர். இதுவே நாம் எதிர்நோக்கும் பிரச்சனையாகும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் புத்தாண்டு செய்தியை வழங்கிய போது மந்திரி புசார் இவ்வாறு சொன்னார்.


Pengarang :