ECONOMYPBTSELANGOR

சுபாங் ஜெயாவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மின்-அழைப்பு பஸ் சேவை

ஷா ஆலம், ஜன 27- சுபாங் ஜெயா வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் வாகன நிறுத்தமிடப் பற்றாக்குறையை போக்குவதற்கும் ஏதுவாக மின்-அழைப்பு பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

எளிதான, சௌகர்யமான மற்றும் பாதுகாப்பான இந்த பயணச் சேவை ஒரு வெள்ளி கட்டணத்தில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வழங்கப்படுவதாக சுபாங் ஜெயா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ கூறினார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், எல்ஆர்டி நிலையம், அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் இந்த சேவை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

செயலி வாயிலாக இந்த பஸ் சேவைக்கு முன்பதிவு செய்வது, பஸ் வரும் நேரத்தை நேரத்தை அறிந்து கொள்வது ஆகிய வசதிகளை இந்த மின்-அழைப்பு முறை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

இதர மின்-அழைப்பு வாடகை கார் சேவைகளுடன் ஒப்பிடுகையில் இச்சேவை மிகவும் மலிவானது. அதாவது ஒரு வெள்ளி கட்டணம் மட்டுமே விதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே , இந்த செயலியை அறிமுகப்படுத்தும் கும்போல் நிறுவனத்தின் தலைவரான கோ சுன் ஹியோன் கூறுகையில், இந்த சேவைக்கு மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக சொன்னார்.

 


Pengarang :