Majlis Perbandaran Kajang (MPKj)
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

காஜாங் நகராண்மைக் கழக ஒருங்கிணைந்த முகப்பிட சேவை வழி 30 நிமிடங்களில் லைசென்ஸ் விண்ணப்பம்

காஜாங், ஜன 29-  ஒருங்கிணைந்த முகப்பிட சேவைத் திட்டத்தின் வழி லைசென்ஸ் விண்ணப்பத்திற்கான நேரத்தை காஜாங் நகராண்மைக்  கழகம் 15 முதல் 30 நிமிடங்களாக குறைத்துள்ளது.

மொத்தம் 95 விதமான லைசென்ஸ் விண்ணப்பங்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இந்நடவடிக்கை புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

லைசென்ஸ் விண்ணப்பங்கள் முப்பதே நிமிடங்களில் பரிசீலிக்கப்படுவதற்கு ஒருங்கிணைந்த முகப்பிட சேவை உதவுவதை காண முடிகிறது. ஆவணங்கள் முழுமையாக இருக்கும் பட்சத்தில் இப்பணிக்கு 15 நிமிடங்கள் மட்டும் போதுமானது என்றார் அவர்.

மக்களின் நலனுக்காக இந்த சேவை முறையை காஜாங் நகராண்மைக் கழகம் மேலும் மேம்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக இங்குள்ள நகராண்மைக் கழக தலைமையகத்தில் இந்த முகப்பிட சேவையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் காஜாங் நகராண்மைக் கழகம் காஜாங்கை மக்கள் வசிப்பதற்குரிய வசதிகள் கொண்ட நகராக உருவாக்குவற்கான திட்டங்களை வகுக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :