ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

99 விழுக்காட்டு கோவிட்-19 நோய்த் தொற்றுகள் ஒன்றாம், இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை

கோலாலம்பூர், ஜன 30- நாட்டில் நேற்று பதிவான 5,139 கோவிட்-19 சம்பவங்களில் 99 விழுக்காடு அல்லது 5,089 ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை கொண்டவையாகும்.

எஞ்சிய ஒரு விழுக்காடு அல்லது 50 சம்பவங்கள் நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர்  நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்றைய புதிய நோய்த் தொற்றுகளுடன்  சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 61 ஆயிரத்து 069 ஆகப் பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்கு பிறகு முதன் முறையாக இம்மாதம் 27 ஆம் தேதி அந்த எண்ணிக்கை 5,349 ஆக பதிவானது. 

நேற்று பதிவான 5,139 சம்பவங்களில் 226 வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவிய வேளையில் 4,913 சம்பவங்கள் உள்ளுரில் அடையாளம்  காணப்பட்டன. நோய்க் கண்டவர்களில் 119 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 69 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று இந்நோய்த் தொற்றிலிருந்து 3,767 பேர் குணமடைந்தனர். இதன் வழி நோயின் பாதிப்பிலிருந்து முற்றாக விடுபட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 77 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.

 


Pengarang :