ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் பண்டமாரான் தொகுதியில் 300 மாணவர்களுக்கு உதவி

ஷா ஆலம், ஜன 31- "மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்" திட்டத்தின் கீழ் பண்டமாரான் தொகுதியிலுள்ள 300 வசதி குறைந்த மாணவர்களுக்கு தலா 100 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டது.

எம் பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் ஏற்பாட்டில் இதற்கான நிதி வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ கூறினார்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் வசதி குறைந்த பெற்றோரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

நான் 10 பள்ளிகளுக்கு நேரில் சென்று இந்த உதவித் தொகையை வழங்கினேன். இதன் மூலம் மாணவர்களின் நிலை மற்றும் அவர்களின் தேவையை அறிந்து  கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.

இந்த உதவி பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் அதேவேளையில் மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்திற்காக எம்.பி.ஐ. இவ்வாண்டில் 16 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை  ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் உள்ள 16,800 மாணவர்கள் பயன்பெறுவர்.

இதனிடையே, தாவாஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் தகுதியுள்ள 350 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் இம்மாத தொடக்கத்தில் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

Pengarang :