ECONOMYMEDIA STATEMENTPBT

பாத மசாஜ் நடைபாதை சுபாங் ஜெயாவில் நிர்மாணிப்பு

ஷா ஆலம், பிப் 2- சுபாங் ஜெயா வட்டார மக்களின் வசதிக்காக   யு.எஸ்.ஜே. 9/5 பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இயற்கையாக பாத மசாஜ் ஏற்ப நடைபாதை அமைக்கப் பட்டுள்ளது.

சுபாங் ஜெயா தொகுதி மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பல்வேறு சிறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மேய் ஸீ கூறினார். யு.எஸ்.ஏ. 9 பகுதியில் மூத்த குடிமக்கள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு குடியிருப்பாளர் சங்கம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது என்றார் அவர்.

மொத்தம் 19,997 வெள்ளி மதிப்பிலான இந்த நடைபாதை திட்டம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முற்றுப் பெற்றதாக அவர் தெரிவித்தார். காலை, மாலை இரு வேளைகளிலும் பொது மக்கள் இங்கு பயிற்சி மேற்கொள்வதை காணமுடிவதாக  அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இந்த பாத மசாஜ் பயிற்சி உடலாரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால் இத்திட்டம் பொது மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக விளங்குகிறது என்று யு.எஸ்.ஜே. 9 ருக்குன் தெத்தாங்கா தலைவர் கூ கா ஜின் தெரிவித்தார்.

 


Pengarang :