ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்பாட்டில் சீன சமூகத்திற்கு ஜோம் ஷேப்பிங் பற்றுச்சீட்டு, அங்பாவ் விநியோகம்

ஷா ஆலம். பிப் 2– சீனப்புத்தாண்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்  தொகுதியிலுள்ள சீன சமூகத்தினருக்கு பல்வேறு உதவிகளை நல்கினர்.

புக்கிட் மெலாவத்தி உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி சுங்கை பூலோவிலுள்ள சீன சமூகத்தினருக்கு மாண்டரின் ஆரஞ்சுகளை விநியோகம் செய்தார்.

மேலும் இப்பெருநாளை முன்னிட்டு அவர் தஞ்சோங் கிராமாட் அருகிலுள்ள கம்போங் பாகான் குடியிருப்பாளர்களுக்கு உணவுக் கூடைகளையும் விநியோகித்தார்.

இதனிடையே, தாமான் டெம்ப்ளர் தொகுதி உறுப்பினரான முகமது சானி ஹம்சான் முப்பது பேருக்கு 100 வெள்ளி அங்காவ் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

வசதி குறைந்தவர்களும் பெருநாள் மகிழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் எனும் நோக்கிலான இந்த திட்டத்தை அவர்  பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர்  மகளிர் சமூக நல மன்றத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டார்.

கோலக் கிள்ளான் உறுப்பினர் அஸ்மிஸான் ஜமான் ஹூரி தனது தொகுதியிலுள்ள 350 மூத்த குடிமக்கள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகித்தார்.

பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினரான ரோசானா ஜைனால் அபிடின் பாசீர் பெனாம்பாங், கம்போங் பாகான் நிர்வாக மன்றத்துடன் இணைந்து மாண்டரின் பழங்களை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டார்.


Pengarang :