Selangor Fruits Valley sedia menerima lebih ramai pengunjung. Foto YB
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் புரூட் வேலியில் சுற்றுலா நடவடிக்கைகள் தொடங்கின

ஷா ஆலம், பிப் 5-  கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பல்வேறு சுற்றுலா  நடவடிக்கைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் ஃபுரூட் வேலி  (எஸ்.எஃப்.வி.) மாதந்தோறும் லாபம் ஈட்டத் தொடங்கி விட்டது.

டிக்கெட் விற்பனை, பழங்கள் மற்றும் காய்கறி வர்த்தகம், கருத்தரங்கு ஏற்பாடு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டதாக அதன் சந்தை நிர்வாகி நோர் ரஷிடா முகமது கூறினார்.

மற்ற சுற்றுலா மையங்கள் நஷ்டத்தையும் அதிலிருந்து மீள்வதற்கு பெரும் போராட்டத்தையும் எதிநோக்கும் வேளையில் எஸ்.எஃப்.வி. தொடர்ந்து தாக்குப் பிடிப்பதோடு  வெற்றிகரமாகவும் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

இங்கு நடத்தப்படும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளதோடு அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, இந்த சுற்றுலா மையத்தில் காய்கறிகள் மறறும் பழவகைகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதோடு சீரான உணவு விநியோகத்தையும் உறுதி செய்துள்ளது என்று அவர் சொன்னார்.

பெஸ்தாரி ஜெயாவில் சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மையத்தில் இருபது வகையான பழ வகைகள் பயிரிடப்படுகின்றன.

Pengarang :