ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

ஷா ஆலமில் வெள்ளத் தடுப்பு சுரங்கப் பாதை- மத்திய அரசின் பரிந்துரையை சிலாங்கூர் பரிசீலிக்கும்

ஷா ஆலம், பிப் 6– சிலாங்கூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டம் (ஸ்மார்ட்) மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாநில அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.

இவ்விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் திரட்டி வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாங்கள் பல்வேறு வழிவகைளை ஆராய்ந்து வருகிறோம். அவற்றில் சுங்கப் பாதை திட்டமும் ஒன்று. ஜப்பானில் உள்ளதை போன்ற ஆற்றோர நீர் சேகரிப்பு தொழில்நுட்பமும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

தீர்வுக்கான வழிவகைகளில் இவையாவும் அடங்கியுள்ளன. அவற்றை விரைவாகவும் ஆக்ககரமான முறையிலும் எவ்வாறு அமல்படுத்தப் போகிறோம் என்பதுதான் தற்போதுள்ள சவாலாகும் என்றார் அவர்.

சுங்கப் பாதை தொடர்பான பரிந்துரையை தமது தரப்பு வரவேற்பதாக கூறிய அவர், எனினும், எவ்வளவு உபரி நீரை அதன் மூலம் வெளியேற்ற முடியும் என்பதை கண்டறிய வேண்டியுள்ளது என்றார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த வெள்ளச் சம்பவத்தைப் பொறுத்த வரை அளவுக்கு அதிமான மழை நீரை சேகரிக்கும் ஆற்றல் கால்வாய்களுக்கு இல்லாதது மற்றும் கடல் பெருக்கு ஆகியவை முக்கிய காரணமாக விளங்கின என அவர் குறிப்பிட்டார்.

வெள்ளப் பிரச்னைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் விதமாக கோலாலம்பூரில் உள்ளதைப் போல் ஷா ஆலம் நகரின் மக்கள் நெரிசல்மிக்க பகுதிகளில் ஸ்மார்ட் சுங்கப்பாதை அமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அமிருடின் கூறியிருந்தார்.


Pengarang :