ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இரண்டு  மாதங்களில் முற்றுப் பெறும்

பெட்டாலிங் ஜெயா, பிப் 9– தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத்திற்கு பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இரு மாத காலத்தில் முழுமையாக முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமான் ஸ்ரீ மூடா வட்டாரம் பரந்த குடியிருப்பு பகுதியாக விளங்குவதால் அங்குள்ள கால்வாய்கள் மற்றும் வடிகால்களை சுத்தம் செய்யும் பணியை முடிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

மணல், மண், கற்கள் மற்றும் சகதியால் மூடப்பட்டிருக்கும் அப்பகுதியிலுள்ள வடிகால்களை கூட்டுத் துப்புரவு இயக்கம் மூலம் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை உறிஞ்சி எடுப்பதன் மூலம் சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய முடிகிறது. இந்த பணியை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடித்து விட முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள தாபோங் ஹாஜி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கால்வாய்களுக்கு அருகில் குப்பைகளை போட வேண்டாம் என்றும் பொது மக்களை ரம்லி  கேட்டுக் கொண்டார். இத்தகையப் பொறுப்பற்றச் செயல்களால் குப்பைகள் வடிகால்களில் நிரம்பி சீரான நீரோட்டம் தடைபடுவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :