ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்

ஷா ஆலம், பிப் 10: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில சட்டமன்ற பிரதிநிதிகள் தங்கள் முயற்சிகளைத் தொடர்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இன்று வரை சுமார் 450 மாணவர்கள் பண உதவி மற்றும் உபகரணங்களை பெற்றுள்ளனர் என்று மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

அந்தத் மொத்ததில், 300 மாணவர்கள் எம்.பி.ஐ (மந்திரி புசார் சிலாங்கூர் ஒருங்கிணைப்பு ஸ்தாபனத்திலிருந்து 100 வெள்ளியை பெற்றனர், மேலும் 150 மாணவர்கள் மேரு தொகுதி சட்டமன்ற (DUN) அலுவலகத்தில் இருந்து அதே அளவு  தொகையை பெற்றனர்.

உதவி இன்னும் விநியோகிக்கப்படுகிறது, இந்த திட்டம் வெள்ளம் மற்றும் நோய்த்தொற்று காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் சுமையை குறைக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

புக்கிட் மெலாவதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி, தனது தரப்பு முதல் வகுப்பு பள்ளி அமர்வுக்கு நுழையும் மாணவர்களுக்கு 400 புத்தகப் பைகள் தபுங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தவாஸ்) வழங்கியதை  விநியோகித்தப் பின்னர் கூறினார்.

“மேலும் 300 மாணவர்கள் எம்.பி.ஐ ஆல் ஸ்பான்சர் செய்யப்பட்ட 100 வெள்ளியைப் பெற்றனர். இந்த பங்களிப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து கற்க ஒரு புதிய புத்துணர்ச்சியை உருவாக்கும் என நாங்கள் நம்புகிறோம், “என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு, மாநில சட்டமன்ற தொகுதி முழுவதும் மொத்தம் 16,800 மாணவர்களை உள்ளடக்கிய திட்டத்தின் வெற்றிக்காக எம்.பி.ஐ  RM 16.8 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :