ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 21,315 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

ஷா ஆலம், பிப் 14- நாட்டில் இன்று மொத்தம் 21,315 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை 21,072 ஆக இருந்தது.

இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 21,228 அல்லது 99.59 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

எஞ்சிய 87 சம்பவங்கள் அதாவது 0.41 விழுக்காடு அதிக ஆபத்தான மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை கொண்டவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஒன்று முதல் ஐந்தாம் கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை மற்றும் விழுக்காடு வருமாறு-

1 ஆம் கட்டம் – 6,200 சம்பவங்கள் (29.09%)

2 ஆம் கட்டம் – 15,028 சம்பவங்கள் (70.50%)

3 ஆம் கட்டம் – 48 சம்பவங்கள் (0.23%)

4 ஆம் கட்டம் – 23 சம்பவங்கள் (0.11%)

5 ஆம் கட்டம் – 16 சம்பங்கள் (0.07%)

இன்று பதிவான புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 61 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :