ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஆசிய பூப்பந்து போட்டிக்கான 400 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம்,பிப் 14: 2022 ஆசிய அணி பூப்பந்து போட்டியைல் (BATC) முதல் நாளுக்கான மொத்தம் 400 டிக்கெட்டுகள் 10 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன.  மதியம் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட ஒன்பது நிமிடங்களில் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழு செயலாளர் முகமது நிஜாம் மர்ஜுகி தெரிவித்தார்.

“பிற்பகல் நுழைவிற்கான 200 டிக்கெட்டுகள் ஆறு நிமிடங்களுக்குள் விற்கப்பட்டன, காலை நுழைவிற்கான அனைத்து 200 டிக்கெட்டுகளின் விற்பனையும் மதியம் 12.09 மணிக்கு நிறைவடைந்தது. “இந்த குறுகிய  நேர விற்பனையானது, பலர் போட்டியை காண விரும்புகிறார்கள் என்பதற்கு சான்றாகும், ஆனால் இந்த நேரத்தில் கோவிட் -19 நோய்தொற்றுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

முன்னதாக போட்டி மைதானத்தில் 1,000 பார்வையாளர்களை அனுமதிக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில், சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் (MSN) நிர்வாக இயக்குனரான முகமது நிஜாம், டிக்கெட் விற்பனை ஒவ்வொரு போட்டிக்கு முந்தைய நாள் https://selangorbatc2022.com வழியாக நண்பகல் 12 மணி முதல் இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும் என்றார்.

“டிக்கெட்டுகள் வாங்கியதற்கான ஆதாரமாக அடையாள அட்டை அல்லது பாஸ்போர்டை உ டன் கொண்டு வர வேண்டும். வாங்குபவர்கள் மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்ய வேண்டும், முக கவசம் அணிந்து மற்றும் கூடல் இடைவெளியை கடைபிடிக்க  வேண்டும். “முழுமையான தடுப்பூசிகளை பெற்ற பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. என்று அவர் கூறினார்.

ஆசியா பூப்பந்து மற்றும் மலேசியாவின் பூப்பந்து அசோசியேஷன் ஆகியவற்றுடன் இணைந்து எம்.எஸ்.என் சிலாங்கூர் ஒருங்கிணைத்த BATC 2022 ஐ இந்த ஞாயிற்றுக்கிழமை வரை சிலாங்கூர் முதல் முறையாக நடத்தியது. மலேசியாவைத் தவிர, இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.


Pengarang :