ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

2030 க்குள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை 33.3 விழுக்காடாக நிலை நிறுத்த திட்டம்

ஷா ஆலம், பிப் 15- வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரிலுள்ள 33.3 விழுக்கட்டுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 32.5 விழுக்காடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் பசுமைத் தொழிநுட்பத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் குறையாமலிருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் அதன் அளவை உயர்த்தவும் மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் சாத்தியம் உள்ள பகுதிகளை அடையாளம் காண்பதும் அம்முயற்சிகளில் அடங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என நம்புகிறோம். எனினும் இது எளிதான பணியல்ல. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆர்ஜிதம் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றார் அவர்.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நீரை சேகரிப்பது மற்றும் வெப்பத்தை தணிப்பது ஆகிய நோக்கங்களுக்காக மாநில அரசு 3 இடங்களில் 581.48 ஹெக்டர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சபாக் பெர்ணமில் உள்ள சுங்கை பாஞ்சாங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, அம்பாங் பெச்சா, உலு லங்காட்டின் புரோகா ஆகியவையே அப்பகுதிகளாகும் எனக் கூறிய அவர், இந்த வனப்பகுதிகளில் அரிய வகை தாவரங்களும் உயிரினங்களும் உள்ளதாகச் சொன்னார்.


Pengarang :