ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSUKANKINI

ஜூன் மாதம் நடக்க உள்ள ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டியை மலேசியா ஏற்று நடத்த உள்ளது.

கோலாலம்பூர், பிப் 17 – ஜூன் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை இறுதி சுற்று தகுதிப் போட்டிக்கு,  தகுதி சுற்று போட்டிகள் நடத்தும் ஆறு நாடுகளில் ஒன்றாக மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து,  சொந்த மைதான சாதகம் ஹரிமாவ் மலாயா அணிக்கு கிடைத்துள்ளதால் இப்போது 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக உணரப்படுகிறது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மீதமுள்ள 11 அணிகளைத் தீர்மானிக்கும் தகுதிச் சுற்றில் இந்தியா, குவைத், கிர்கிஸ்தான், மங்கோலியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை பட்டியலிட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான கத்தார், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலியா, சீனா உட்பட  2022 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகளின் இரண்டாவது சுற்றில் முதல் 12 அணிகள் ஏற்கனவே தங்கள் இடங்களை பதிவு செய்துள்ளது.

இப்போது இறுதிச் சுற்று தகுதி போட்டியில்,பங்கேற்க ஜூன் 8, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் 11 இடங்களுக்காக 24 நாடுகள் போராட உள்ளன, ஆறு குழுக்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஐந்து சிறந்த இரண்டாம் நிலையைப் பிடித்தவர்கள் மட்டுமே தகுதி பெற முடியும்.

பிப்ரவரி 24 ஆம் தேதி புக்கிட் ஜலீலில் உள்ள AFC ஹவுஸ்சில் அதற்கான குலுக்கல்  நடைபெறும், அங்கு அணிகள் பிப்ரவரி 10 FIFA தரவரிசையின் அடிப்படையில் ஐந்து குழுக்களாக பிரிக்கப்படும். பகுதி 1. உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தியா, பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், தாய்லாந்து, தஜிகிஸ்தான், பிலிப்பைன்ஸ், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகியவை பகுதி.2 இல் இருக்கும்.

மலேசியா, ஆப்கானிஸ்தான், ஏமன், மியான்மர், மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இணைந்து பகுதி 3 இல் இருக்கும், சிங்கப்பூர், நேபாளம், கம்போடியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகியவை பகுதி 4 இல் இருக்கும்.

மலேசியா கடைசியாக 1980 குவைத்தில்  தகுதியின் அடிப்படையில் ஆசிய கோப்பை தகுதி சுற்றுக்கு சென்றது, 2007 இல், ஹரிமாவ் மலாயா அணி இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமுடன் கூட்டுப் போட்டியாளர்களாக இடம்பெற்றது. – பெர்னாமா


Pengarang :