ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப் பணிகளுக்காக கிட்டத்தட்ட 2 கோடி செலவிடப்பட்டது – ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலம்,பிப் 18: வெள்ளத்திற்குப் பிந்தைய முதல் மற்றும் இரண்டாம் கட்டச் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் இதுவரை கிட்டத்தட்ட 2 கோடியைச் செலவிட்டுள்ளது. வெள்ளக் கழிவுகளை வைக்க ஜெராமில் ஒரு சிறப்புப் பகுதியை உருவாக்குவதும் இந்த ஒதுக்கீட்டில் உள்ளடங்குவதாக உள்ளூராட்சி உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இதுவரை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது, கே.இ.டி.பி. கழிவு மேலாண்மை,உள்ளூர் அதிகாரிகள் மற்றும் வேல்வைட் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றிற்கு கிட்டத்தட்ட 2 கோடி வழங்கப்பட்டிருக்கலாம். “நாங்கள் வேல்வைட் ஹோல்டிங்ஸுக்கு பணம் செலுத்துகிறோம், ஏனென்றால் வெள்ளத்தை சுத்தம் செய்ததிலிருந்து அவர்கள் வெள்ளக் கழிவுகளை மட்டும் போடுவதற்காக ஜெராமில் ஒரு சிறப்புப் பகுதியை உருவாக்க வேண்டியிருந்தது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைக்க, பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் வடிகால்களை விரிவுபடுத்தவும், அணைகளை உயர்த்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக ஸீ ஹான் கூறினார். டிசம்பர் 17 மற்றும் 19 க்கு இடையில் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்தது, இது முந்தைய அதிகபட்ச சுமார் 180 மில்லிமீட்டரை விட இரண்டு மடங்கு அதிகமாகும், இதன் விளைவாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கடந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று, வெள்ளச் சம்பவத்தைத் தொடர்ந்து சிலாங்கூர் பாங்கிட் திட்டத்தைத் தொடங்குவதற்கு மாநில அரசு 10 கோடி நிதியை அறிவித்தது.

உள்கட்டமைப்பு மறுவாழ்வு தவிர, வெள்ளத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு RM10,000 உதவியும், வீடுகளை மறுசீரமைக்க குடும்பத் தலைவர்களுக்கு RM1,000 உதவியும் இந்த ஒதுக்கீட்டில் அடங்கும்.


Pengarang :