ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஆசிய பூப்பந்து: போட்டியை வெல்வதற்கு தேசிய ஆண்கள் அணி நெருங்கிவிட்டது.

ஷா ஆலம், பிப் 20: 2022 ஆசிய அணி பூப்பந்து போட்டியில் (BATC) தென் கொரியாவை 3-0 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தியதன் வழி, ​​தேசிய ஆண்கள் அணி அரையிறுதியை ஆட்டத்தை அபாரமாக முடித்தது.

இதன் வழி இன்று மாலை 4 மணிக்கு இந்தோனேஷியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான தகுதியை மலேசிய அணி வெற்றி பெற்றுள்ளது.

செத்தியா சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நேற்று பிற்பகல் நடைபெற்ற போட்டியில் தேசிய ஒற்றையர் சாம்பியன் லீ ஜி ஜியா 13-21, 21-13 மற்றும் 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஜியோன் ஹியோக் ஜினை வீழ்த்தினார்.

இரண்டாவது ஆட்டத்தில் தேசிய இரட்டையர் ஜோடியான சியா ஆரோன்-சோ வூய் யிக் ஜோடி 21-14, 20-22 மற்றும் 21-19 என்ற கணக்கில் கிம் ஹ்வி டே மற்றும் கிம் ஜேவான் ஜோடியை வீழ்த்தியது.

கிம் ஜூ வானுக்கு எதிரான ஒற்றையர் ஆட்டக்காரர் ங் டிசே யோங் மூலம் 19-21,21-16 மற்றும் 21-12 என்ற மூன்று செட்களில் ஒரு மணி நேரம் 11 நிமிடங்களில் தேசிய அணி தொடர்ந்து எழுச்சி பெற்றது.

பிப்ரவரி 15 முதல் ஆறு நாள் போட்டிகள் இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன, மேலும் ஆஸ்ட்ரோவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.


Pengarang :