ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் SPM தேர்வுக்கான மாணவர்களுக்கு இலவச பயிற்ச்சி

ஷா ஆலம், பிப் 20: மலேசிய கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வுக்கான மாணவர்கள் இன்று தொடங்கும் சிலாங்கூர் தன்னார்வலர்கள் குழு நடத்தும் ஆன்லைன் மீள்பார்வை திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

மாநிலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) மாணவர்களுக்கு இலவசமாக SPM 2021 இறுதிக்கட்ட தயார் நிலைக்கான பயிற்ச்சி அளிக்கப்படுவதாக பள்ளிப் பிரிவுத் தலைவர் முகமது ஹாசிக் ஃபிக்ரி ஜஸ்னி தெரிவித்தார்.

சிலாங்கூரில் வசிக்கும் அல்லது பள்ளியில் படிக்கும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 600 படிவம் ஐந்து மாணவர்களை இந்தத் திட்டத்தில் பங்கேற்க இலக்கு வைத்துள்ளோம்.

“இந்த திட்டத்தின் நோக்கம் மற்ற நண்பர்களுடன் பாடங்களை மீள்பார்வை செய்வதற்கான வாய்ப்பைப் பெற அவர்களுக்கு உதவுவதாகும்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 20 அன்று இயற்பியல் மற்றும் கணிதம், வரலாறு (பிப்ரவரி 21) மற்றும் ஆங்கிலம் (பிப்ரவரி 22) ஆகிய பாடங்கள் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

ஆசிரியர் அஃபிக் (இயற்பியல்), ஆசிரியர் சியாமிம் (கணிதம்), ஆசிரியர் விஸ்வா (வரலாறு) மற்றும் ஆசிரியை பெல்லா (ஆங்கிலம்) ஆகியோர் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்வமுள்ளவர்கள் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம் அல்லது 0176127269 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.


Pengarang :