ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பிப்ரவரி வரையிலான பேங்க் நெகாராவின் அனைத்துலக கையிருப்பு 11,580 கோடி டாலர்

கோலாலம்பூர், பிப் 22- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரையிலான பேங்க் நெகாராவின் அனைத்துலக கையிருப்பு 11,580 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த தொகை 11,610 கோடி டாலராக இருந்தது.

இந்த கையிருப்பு 6.1 மாதங்களுக்கு பொருள், சேவை மற்றும் இறக்குமதிக்கு நிதியளிக்க போதுமானது என்பதோடு குறுகிய கால வெளிக்கடனின் மொத்த மதிப்பில் 1.2 மடங்காகும் என்று பேங்க் நெகாரா அறிக்கை ஒன்றில் கூறியது.

வெளிநாட்டு நாணய கையிருப்பு (10,240 கோடி டாலர்), ஐ.எம்.எப். கையிருப்பு நிலை (140 கோடி டாலர்), சிறப்பு கடன்வாங்கு சலுகை (600 கோடி டாலர்), தங்கம் (230 கோடி டாலர்) மற்றும் இதர சொத்து கையிருப்புகள் (370 கோடி டாலர்) ஆகியவை இந்த அனைத்துலக நிதிக் கையிருப்பு நிலையின் முக்கிய அம்சங்களாகும்.

தங்கம், அந்நியச் செலாவணி மற்றும் சிறப்பு கடன்வாங்கு சலுகைள் (48,223 கோடி வெள்ளி) அரசாங்கப் பத்திரங்கள் ( 1,221 கோடி வெள்ளி), நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகை (80,842 கோடி வெள்ளி) கடன்கள் மற்றும் முன்தொகை (2,333 கோடி வெள்ளி) நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் (416 கோடி வெள்ளி) மற்றும் இதர சொத்துகள் (7,134 கோடி வெள்ளி) ஆகியவற்றை இச்சொத்துகள் உள்ளடக்கியுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Pengarang :