ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் மாவட்டத்தில் நேற்று 14,000 பேர் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்

கிள்ளான், பிப் 24- கிள்ளான் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 13,997 பேர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று 1,000 வெள்ளி வெள்ள உதவி நிதியைப் பெற்றனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 46,554 பேருக்கு இதுவரை வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது.

கிள்ளான், மாவட்ட, நில அலுவலக பல்நோக்கு மண்டபம், கெமுனிங் உத்தாமா எம்.பி.எஸ்.ஏ. மண்டபம், டேவான் ஸ்ரீ கெராயோங், பண்டமாரான் விளையாட்டுத் தொகுதி, காப்பார் டி.என்.பி. மண்டபம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்நிதி வழங்கப்பட்டது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்ததைப் போல் எஞ்சிய 24,429 பேருக்கு வரும் வெள்ளிக் கிழமைக்குள் இந்நிதி முழுமையாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

மத்திய அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையுடன் சிலாங்கூர் அரசின் உதவித் தொகையும் சேர்த்து வழங்கும் பணியை இவ்வாரத்திற்குள் முடிக்க தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

நிதி வழங்கும் பணி சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம், ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக பணியாளர்கள் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட நாளில் உதவித் தொகையைப் பெறுவதற்கு வர முடியாத பட்சத்தில் அடையாளக் கார்டின் நகலுடன் குடும்ப உறுப்பினர்களை அனுப்பினால் போதுமானது. உதவித் தொகை அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்


Pengarang :