ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சலவைக் கடையில் தஞ்சம் புகுந்த ஆதரவற்ற முதியவருக்கு கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் உதவி

ஷா ஆலம், பிப் 24- வறுமையில் சிக்கி நிராதரவான நிலையில் பெட்டாலிங் ஜெயா, எஸ்.எஸ்2 இல் உள்ள சலவைக் கடைக்கு வெளியே அடைக்கலம் நாடிய முதியவருக்கு கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் உதவிக் கரம் நீட்டினார்.

முறையான பராமரிப்பைப் பெறுவதற்காக 62 வயதான அந்த முதியவர் சுங்கைவே, கம்போங் பாரு ஸ்ரீ  செத்தியாவிலுள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த முதியவருக்கு ஆர்.டி.கே மற்றும் பி.சி.ஆர். கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால் நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரின் நடமாட்டம் உறுதியற்றதாகவும் பலவீனமானவும் இருந்தது. தொடக்கத்தில் அவரை மலிவு கட்டண தங்கும் விடுதியில் தங்க வைத்திருந்தோம். அவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் அவரை இரத்த மற்றும் சிறுநீர் சோதனைக்கு அனுப்பினோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

அந்த முதியவர் பின்னர் பேரடைம் மால் தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :