ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

சிப்பாங் வட்டாத்தில் ஆற்று முகத்துவாரங்களில் 1,600 மரங்களை நடும் இயக்கம்

சிப்பாங், பிப் 27-  அலை தடுப்பு பகுதிகளாக வலுப்படுத்தும் நோக்கில் இம்மாவட்டத்திலுள்ள இரு ஆற்று முகத்துவார பகுதிகளில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 1,600 மரங்களை நடும் இயக்கம் மேற்கொள்ளப் படுகிறது.

இன்று சுங்கை செப்பாங் பெசார், பந்தாய் பாசீர் பூத்தே பகுதியில் 1,000 ரிஸோபோரா வகை சதுப்பு நில மரங்கள் நடப்பட்ட வேளையில் நாளை பாகான் லாலாங் கடற்கரை பகுதியில் 600 கெத்தாப்பாங் மற்றும் ரூ வகை மரங்கள் நடப்படும்.

பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் கடற்கரை பகுதியை மீட்டெடுக்கும் முயற்சியாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

இந்த மரம் நடும் இயக்கத்தின் மூலம் கடல் வாழ் உயிரினங்களின் உணவு ஆதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்பதோடு சுற்றுவட்டார மக்களின் குறிப்பாக மீனவர்களின் சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

இந்த இரண்டு நாள் மரம் நடும் இயக்கம் சிலாங்கூர் வன இலாகா, மலேசிய ரிம்பாவன் கழகம், பாலாய் இக்திசாஸ் மலேசியா, மலேசிய புத்ரா பல்கலைக்கழக வனத் துறை ஆகியற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தகைய மரம் நடும் நடவடிக்கைகளின் மூலம் வட்டாரத்தில் சீதோஷண நிலையை சீராக வைத்திருக்க முடியும் என்பதோடு வெப்ப அதிகரிப்பையும் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பருவ நிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :