ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை வரை வானிலையை கடுமையாக இருக்கும் – மெட்மலேசியா

ஷா ஆலம், மார்ச் 3 – மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாநிலத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டங்களில் இன்று மாலை வரை கடும் வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதி, புத்ராஜெயா கூட்டரசுப் பகுதி, மலாக்கா மற்றும் ஜோகூர் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்” என்று பிற்பகல் 2.55 மணிக்கு ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் பேராக் (கிரியன், லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா, கோலா கங்சார், கிந்தா, கம்பார், பத்தாங் பாடாங் மற்றும் தஞ்சோங் மாலிம்) மற்றும் பகாங் (கேமரன் மலை, ரவுப், பெந்தோங், பெக்கான் மற்றும் ரோம்பின்).

“நெகிரி செம்பிலான் (ஜெலுபு, சிரம்பான், போர்ட் டிக்சன், கோலா பிலா, ரெம்பாவ் மற்றும் தம்பின்) ஆகியவையும் பாதிக்கப்படும். கிழக்கு மலேசியாவில், சரவாக்கின் பகுதிகளில் கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான் (லுபோக் அந்து), சிபு, மூகா (டாரோ, மது, டாலாட் மற்றும் மூகா), கபிட் (சோங், கபிட் மற்றும் பெலாகா), பிந்துலு (தாதௌ), மீரி (மீரி மற்றும் மருடி) மற்றும் லிம்பாங் ஆகியவை அடங்கும்.

“கடமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள சபாவின் பகுதிகளில் (சிபிதாங், தெனோம் மற்றும் பியூஃபோர்ட்) மற்றும் பந்தாய்ப் பாராட் ஆகியவை அடங்கும். அனைத்துப் பகுதிகளிலும் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும்,” என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

 


Pengarang :