Calon Dewan Undangan Negeri (DUN) Semerang Haryati Abu Nasir. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல்- மகளிருக்கு உதவுவதில் சிலாங்கூரை பின்பற்ற  கெஅடிலான் வேட்பாளர் விருப்பம்

ஆயர் ஹீத்தாம், மார்ச் 4- ஜோகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மாநிலத்தை உதாரணமாகக் கொண்டு மகளிருக்கு ஆக்கத் திறனளிக்கும் திட்டங்களை தாம் அமல்படுத்தவுள்ளதாக கெஅடிலான் வேட்பாளர் கூறுகிறார்.

இல்லத்தரசியாக இருந்தாலும் பெண்களால் உபரி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதை சிலாங்கூர் அரசு நிரூபித்துள்ளது என்று செமராங் தொகுதி வேட்பாளர் ஹர்யாத்தி அபு நாசீர் கூறினார்.

சிலாங்கூரில் பல பெண்கள் வேலை செய்வதில்லை. மகளிருக்கு ஆக்கம் தரக்கூடிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் காரணத்தால் பயிற்சிகளின் வாயிலாக அவர்களின் தலையெழுத்து மாற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் இத்தகைய திட்டங்களை அமல்படுத்தும் போது அதனை நாம் நடைமுறைப்படுத்துவது இயலாத காரியமல்ல என்றும் அவர் சொன்னார்.

செமராங் தொகுதிக்கான பிரதான தேர்தல் நடவடிக்கை அறையில் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.

செமராங் தொகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் வேலை இல்லாதவர்களாக உள்ளதால் இத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிலாங்கூர் மாநிலத்தை தாம் முன்மாதிரியாக கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் அடுப்படியில் சமையல் வேலையை மட்டும் செய்கின்றனர். அவர்களுக்கு நாம் போதுமான அறிவாற்றல், பயிற்சி மற்றும் மூலதனத்தை வழங்கினால் உபரி வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும் என்றார் அவர்.

மாநிலத்திலுள்ள இளைஞர்கள் விவசாயத் துறையில் குறிப்பாக வாழை பயிரீட்டில் ஈடுபடுவதற்கு  ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த தாம் விரும்புவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :