ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில்  சுழல் முறையில் வகுப்புகள்

ஷா ஆலம், மார்ச் 5- 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் நேரடி பங்கேற்பின் வாயிலாகவும்  சுழல் முறையிலும் வகுப்புகள் நடத்தப்படும் என்று மூத்த கல்வி அமைச்சர் கூறினார்.

பாலர் வகுப்பு, 1, 2, 6 ஆண்டு மற்றும் சத்துணவுத்  திட்டத்தில் (ஆர்.எம்.டி ) பங்கேற்ற மாணவர்கள் சுழல் முறை கல்வித் திட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்  டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் சொன்னார்.

தேசிய சிறப்புக் கல்விப் பள்ளிகளில் பயிலும்  சிறப்புக் கல்வித் திட்டங்களில் பயிலும் மாணவர்களையும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களையும் இந்த சுழல் முறை உள்ளடக்காது என்றும் அவர் விளக்கினார்.

இதற்கிடையில், 3, 4 மற்றும் 5 ஆண்டு மாணவர்கள் பள்ளி நிர்ணயித்த அட்டவணையின்படி சுழல் முறையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

600க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட தொடக்கப் பள்ளிகளிகளும்  தனியார் தொடக்க பள்ளிகளும் சுழற்சியில்லா கல்வித் முறையை அமல் செய்ய வேண்டும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பகிர்வில் கூறினார்.

 2022/2023 ஆம் கல்வித் தவணை தொடங்கும் தேதியை கல்வியமைச்சு   21 மார்ச் 2022 முதல் 11 மற்றும் 12 மார்ச் 2023 வரை நிர்ணயித்துள்ளது.

ஏ பிரிவில்  உள்ள மாநிலங்களான ஜோகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானுவில் பள்ளித் தவணை 11 மார்ச் 2023 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
 
பி பிரிவில் உள்ள ம மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில்  12 மார்ச் 2023 வரை கல்வித் தவணை அமலில் இருக்கும்.

Pengarang :