ECONOMYEVENTMEDIA STATEMENTSELANGOR

பினாங்கு ஹலால் மாநாட்டை நடத்துவதில் சிலாங்கூர் ஹலால் மாநாடு முன்மாதிரியாகக் கொள்ளப்படும்

ஷா ஆலம், மார்ச் 7-  இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி  பினாங்கு அனைத்துலக ஹலால் கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்துவதில்  அண்மையில் ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாடு முன்மாதிரியாகக் கொள்ளப்படும்.

இம்மாநாட்டிற்குக் கிடைக்கும் ஆதரவை நேரில் கண்டறிவதற்காகத் தொழில்முனைவோருடன் தாம் இம்மாநாட்டிற்கு வந்ததாகப் பினாங்கு மாநில வாணிக, தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ஹலிம் ஹூசேன் கூறினார்.

சிலாங்கூர் கண்காட்சி இன்னும் நடப்புத் தேவைக்கு ஏற்புடையதாக உள்ளதோடு கண்காட்சிக்கு வருகை புரிந்தவர்கள் எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் இருந்ததைக் கண்டோம். இதன் அடிப்படையில் பினாங்கு கண்காட்சியை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் சொன்னார்.

இந்தக் கண்காட்சியின் மூலம் பினாங்கு தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகச் சந்தையைச் சிலாங்கூருக்கு விரிவுபடுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் ஹலால் கண்காட்சியில் பங்கேற்ற பினாங்கு தொழில் முனைவோர் சிலாங்கூர் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நடத்தியதோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டது குறித்து அவர்கள் மனநிறைவும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :