ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

எம்பிஎஸ்ஜே நிலச்சரிவுகளை உறுதிப்படுத்த இரும்பு தடுப்பு நிறுவபடும்.

ஷா ஆலம், மார்ச் 9: சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) அதன் பொறியியல் துறைக்கு, பங்சபுரி சூரியா, தாமான் கின்ராரா 4, பூச்சோங் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சுபாங் ஜெயா டத்தோ பண்டார், டத்தோ ‘ஜோஹாரி அனுவார், துணை டத்தோ பண்டார் முகமது சுல்குர்னைன் பின் சே அலி மற்றும் கின்ராரா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் ஆகியோர் இன்று அப்பகுதிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

கனமழை காரணமாகப் பிரதானப் பள்ளத்தில் நீர்மட்டம் அதிகரித்ததால் இந்தச் சம்பவம் நடந்ததாக ஆய்வு முடிவு கண்டறியப்பட்டது என்று எம்பிஎஸ்ஜே பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் கூறியது.

“எனவே, மண்ணின் நிலையை உடனடியாக உறுதிப்படுத்த, 50 மீட்டர் நீளமுள்ள இரும்பு தடுப்புகளை  அமைக்க, எம்பிஎஸ்ஜே பொறியியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.


Pengarang :