ECONOMYSELANGOR

சிலாங்கூரில் விவாகரத்து அதிகரிப்பு- காரணங்களைப் பட்டியலிட்டார்  ஆட்சிக் குழு உறுப்பினர்

ஷா ஆலம், மார்ச் 18- சிலாங்கூரில் தம்பதியரிடையே விவாகரத்து அதிகமாக இருப்பதற்குக் கிள்ளான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகை, சுற்றுப்புறச் சவால்கள் உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் சிலாங்கூர் இஸ்லாமியச் சமய இலாகாவின் தரவுகளின்படி 6,299 விவாகரத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமியச் சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 1,668 விவாகரத்துகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய அவர், அதற்கு அடுத்த நிலையில் உலு லங்காட், கோம்பாக், கிள்ளான், கோலச் லங்காட், சிப்பாங், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், சபா பெர்ணம் ஆகிய  மாவட்டங்கள் உள்ளன என்றார்.
ஷரியா நீதிமன்றத்தின் கூற்றுப்படி கிள்ளான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் சுற்றுப்புறச் சவால்கள் காரணமாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
மாநிலச் சட்டமன்றத்தில் இன்று சிலாங்கூரில் பதிவாகும் விவாகரத்துகள் குறித்துச் சபா உறுப்பினர் அகமது முஸ்தாயின் ஓத்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு  கூறினார்.


Pengarang :