Kementerian Kesihatan Malaysia (KKM) melalui Twitter berkata bas bernombor pendaftaran PLQ 9689 itu bertolak dari Terminal Satu, Seremban pada jam 8.30 malam, 16 Mac.
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பள்ளி பேருந்து: தொழில் முனைவோர் ஆண்டுக்கு ஒருமுறை புஸ்பாகோம் சோதனைக்கு விண்ணப்பிக்கலாம்

சிரம்பான், மார்ச் 20: கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்தில் (புஸ்பாகோம்) ஆண்டுக்கு ஒருமுறை பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு மலேசிய பள்ளி பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஜிபிபிஎஸ்எம்) அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் தலைவர் முகமது ரோபிக் முகமது யுசோப், தற்போதுள்ள ஆன்லைன் சோதனைக்கு முன்பதிவு முறை தேவைப்படுவதால், பள்ளிப் பேருந்து நடத்துநர்கள் புஸ்பாகோம் சோதனைகளில் கலந்துகொள்வதை எளிதாக்குவதாகக் கூறினார்.

“முன்பு, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும், பள்ளி பேருந்துகள் காத்திருப்பு வரிசைகளை பின்பற்றாமல் வாகன சோதனைக்கு அனுமதிக்கப் பட்டது. ஆனால் இப்பொழுது புஸ்பாகோமின் விதி முறைகள் மாற்றப்பட்டுள்ளதால் பேருந்து நடத்துனர்களுக்கு சிரமமாக உள்ளது.

“எனவே, வாகனங்கள் சோதனைக்காக நுழையும் போது, ​​தோல்வியடைந்து வெளியேறும் போது, அவர்கள் சோதனைக்கான காலியிடங்களை மறு பதிவு செய்ய காத்திருக்க வேண்டியுள்ளது. இது பள்ளி பேருந்து சேவையைத் தொடர்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால், பல ஆபரேட்டர்கள் விரக்தியடைந்துள்ளனர்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

எனவே, பிபிபிஎஸ்என்எஸ் தலைவரான முகமது ரோபிக் கூறுகையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும், மேலும் இந்த வேலையைச் சார்ந்திருக்கும் பேருந்து ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்க உதவ வேண்டும் என்றார்.

இதற்கிடையில், முகமது ரோபிக், பள்ளி பேருந்து அனுமதிப்பத்திரத்தை, தற்போதைய அதிகபட்சம் இரண்டாண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதை அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.


Pengarang :