ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

பெர்மாத்தாங் தொகுதியில் 243 மூத்த குடிமக்கள் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 23- மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் (எஸ்.எம்.யு.இ.) கீழ் இம்மாதம் பிறந்த தேதியைக் கொண்ட 243 மூத்த குடிமக்கள் 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற்றதாக பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

இந்த பற்றுச் சீட்டுகள் நேற்று முன்தினமும் நேற்றும் பாசீர் பெனாம்பாங் பெஸ்ட் ப்ரெஷ் மார்ட் பேரங்காடி முன்புறம் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விநியோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு உதவும் வகையில் இந்த பற்றுச் சீட்டுகளை வழங்கிய மாநில அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் ரோஸானா குறிப்பிட்டார்.

இம்மாதத்திற்கான பற்றுச் சீட்டு விநியோகப் பணியை சீராக மேற்கொள்வதில் துணை புரிந்த தொகுதி சேவை மையத்தைச் சேர்ந்த நேராபிஷ் டாருஸ்மான் தலைமையிலான குழுவினருக்கு தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் சொன்னார்.

மரண சகாய நிதி மற்றும் பற்றுச் சீட்டு விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த எஸ்.எம்.யு.இ. திட்டம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் அமலாக்கத்திற்காக மாநில அரசு இவ்வாண்டில் 2 கோடியே 75 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :