ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSAINS & INOVASI

பல்கலைக்கழக உள் ஆவணம் வைரலானதை அடுத்து யுஐடிஎம் காவல்துறையில் புகார் செய்தது

ஷா ஆலம், ஏப்ரல் 1 – மாரா  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (யுஐடிஎம்) அதன் ஒப்பந்த ஆசிரியர் பி40 மாணவரைத் திட்டிய சம்பவம் தொடர்பில் தொழில் முறை தகவல்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பபட்டதை அடுத்து போலீஸ் புகாரை செய்துள்ளது.

யுஐடிஎம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரோஜியா முகமது ஜானொர் அவர்கள் தங்கள் மாணவர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க இன்று காவல்துறையில் புகார் அளித்ததாக கூறினார்.

“உண்மையில், நான் நிலைமையை புரிந்துகொள்கிறேன். நாம் சமூக ஊடகங்களின் சகாப்தத்தில் வாழ்கிறோம், அதே நேரத்தில், எங்களிடம் சட்டங்களும் உள்ளன. சில தகவல்கள் இரகசியமானவை அவற்றைப் பகிர முடியாது.

“நாம் ரகசியத் தகவலைச் சொன்னால், அறிக்கையைப் பெறுபவர், ஆன்லைனில் அல்லது மின்னஞ்சல் வழியாக இருந்தாலும் சரி, அதை மதிக்க வேண்டும் என்று அர்த்தம். தினசரி உள் நடப்புகளை வெளியே யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது, ”என்று அவர் நேற்று இங்கு அருகிலுள்ள யுஐடிஎம் புஞ்சாக் ஆலமில் 2022 ஆம் ஆண்டு கல்வி படைப்பாற்றல் வாரத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

மூன்று பக்க அறிக்கை யுஐடிஎம் ஆனது நடந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் புகார் அளிப்பதற்கும், சம்பவம் நடந்த இடத்தில் இல்லாதவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் உதவும் என்று ரோஜியா கூறினார்.

“நாங்கள் சில தனிப்பட்ட தகவல்களை  சம்மந்தப்பட்டவருக்கு அப்பால்  பகிர்ந்து கொள்வதில்லை, ஆனால் நாங்கள் அதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பினோம். எங்களிடம் கொள்கைகள் மற்றும் சட்டம் இருந்தாலும், கசிவு எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

இன்றிரவு பேராசிரியர் எமரிட்டஸ் டான்ஸ்ரீ டாக்டர் இப்ராஹிம் அபு ஷா தலைமையில் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்கலைக்கழக இயக்குநர்கள் குழுவின் (LPU) சிறப்புக் கூட்டத்திற்கு யுஐடிஎம் இந்த சிக்கலைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறினார்.

மார்ச் 29 அன்று, மடிக்கணினி இல்லாததற்காக ஒரு விரிவுரையாளர் தனது மாணவியை ஆன்லைன் வகுப்பின் போது கேலி செய்யும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.

வீடியோவில், பல்கலைக்கழக ஆசிரியர் மடிக்கணினி வாங்குவதற்காக தனது தங்கையின் தங்க வளையலை விற்குமாறு மாணவியிடம் கூறுவதும் கேட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து, யுஐடிஎம் உள் ஆவணமும் (காலவரிசை அறிக்கை) வைரலானது.


Pengarang :