ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக குறைந்து 17,476 தொற்றுகளாக உள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 2: தினசரி கோவிட் -19 தொற்று விகிதம் 1,084 தொற்றுகளில் இருந்து நேற்று முதல் 17,476 ஆகக் குறைந்தது. பெரும்பாலான நோயாளிகள் அறிகுறியற்றவர்களாக உள்ளனர்.

அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டத்தில் 17,365 பேர் அல்லது 99.37 விழுக்காட்டினர் உள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்களில், 111 சம்பவங்கள் அல்லது 0.63 விழுக்காடு  மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளனர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்வருபவை நோயாளிகளின் தாக்கங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன: 

1 ஆம் கட்டம்: 9,813 சம்பவங்கள் (56.15 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 7,552 சம்பவங்கள் (43.22 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 37 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 37 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 37 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கி 10,089 தொற்றுகளுடன் தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஐந்து புள்ளிவிவரங்களை எட்டியது. நேற்று, கோவிட் -19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை 18,560 தொற்றுகளைப் பதிவு செய்தது

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,219,395 நோய்த்தொற்றுகள் மொத்தமாக உள்ளன.

 


Pengarang :