ECONOMYSELANGOR

ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. விதிகள் முறையாக சீராக அமலாக்கம்- இங் ஸீ ஹான் தகவல்

சுபாங் ஜெயா, ஏப் 5– அதிகமான வாடிக்கையாளர்கள் வருகை புரிந்த போதிலும் சிலாங்கூரிலுள்ள ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான நிர்வாக நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவது குறித்து மாநில அரசு மனநிறைவு கொள்கிறது.

எஸ்.ஒ.பி. விதிமுறை மீறல் தொடர்பில் இதுவரை  தாங்கள் எந்த புகாரையும் பெறவில்லை என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இன்று நோன்பு மாதத்தின் மூன்றாவது தினமாகும். கடந்த இரு தினங்களாக ரமலான் சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் எஸ்.ஓ.பி. விதிமுறைகள் அங்கு முறையாக கடைபிடிக்கப்படுகின்றன என்றார் அவர்.

நிலைமையை நேரில் கண்டறிவதற்காக தாம் வரும் வியாழக்கிழமை சில ரமலான் சந்தைகளுக்கு வருகை புரியவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பண்டார் புத்ரி பூச்சோங் டவுன் பார்க் பொழுதுபோக்கு பகுதிக்கு இன்று காலை வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் காணப்படும் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு நோன்பு பெருநாளையொட்டி 11,967 வர்த்தக கடைகளுக்கான இடங்களை மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் ஒதுக்கியுள்ளன.


Pengarang :