ECONOMYSAINS & INOVASISELANGOR

ரமலான் சந்தைகளில்  வாடிக்கையாளர் எண்ணிக்கையை கண்டறிய சி.சி.எஸ். முறை அமல்

பெட்டாலிங் ஜெயா, ஏப் 5- ரமலான் சந்தைகளுக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கண்டறிய முக்கிய இடங்களில் சி.சி.எஸ். எனப்படும் மக்கள் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோத்தா டாமன்சாரா, செக்சன் 4, ரமலான் சந்தையில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அமல்படுத்தியுள்ள இந்த அகச் சிவப்பு கதிர் தொழில்நுட்பம் சந்தையைக் கடப்போரின் எண்ணிக்கையை விரைவாக கணக்கிடும்.

சந்தையில் நுழைவோரின் எண்ணிக்கை அங்கு வைக்கப்பட்டிருக்கும் திரையில் பதிவாகும். அதே சமயம் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமானோர் கூடி விட்டால் அது சமிக்ஞை ஒலி எழுப்பும்.

சந்தைக்கு வருவோர் மற்றும் வெளியேறுவோர் எண்ணிக்கையை இந்த சி.சி.எஸ். முறை கணக்கிட்டாலும் வாடிக்கையாளர்கள் மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்வதை ரேலா உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவர்.


Pengarang :