ECONOMYNATIONALSUKANKINI

சுக்மா 2022- 800 சிலாங்கூர் விளையாட்டாளர்கள் 31 விளையாட்டுகளில் பங்கேற்பர்

ஷா ஆலம், ஏப் 7- கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து 800 விளையாட்டாளர்கள் 31 விளையாட்டுகளில் பங்கேற்பர்.

எனினும், சுக்மா நுட்பக் குழுவின் ஆய்வுக்குப் பின்னரே விளையாட்டாளர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் (எம்.எஸ்.எம்.) நிர்வாகத் தலைவர் முகமது நிஸாம் மர்ஜூக்கி சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

இதன் தொடர்பான முடிவை சுக்மா நுட்பக் குழு நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் வெளியிடும். தற்போது அனைத்து விளையாட்டாளர்களும் தராவே தொழுகைக்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

அண்மைய ஆண்டுகளில்  போட்டிகள் எதுவும் நடைபெறாததால் விளையாட்டாளர்களின் தரம் முந்தைய சுக்மா போட்டி அல்லது தேசிய நிலையில் அடையப்பட்ட சாதனையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு சுக்மா போட்டியில் குறைந்தது 60 தங்கப் பதக்கங்கள் பெற்று மூன்றாம் நிலையைப் பெறுவதற்கு சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்ட 20 ஆவது சுக்மா போட்டி இம்முறை கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெறுகிறது.


Pengarang :