Dato’ Menteri Besar, Dato’ Amirudin Shari berucap ketika majlis Berbuka Puasa bersama Ketua Jabatan Agensi dan Anak Syarikat Negeri Selangor di Kediaman Rsami Menteri Besar, Shah Alam pada 6 April 2022. Turut sama Exco Hal Ehwal Agama Islam, Mohd Zawawi Ahmad Mughni (tengah) . Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

உள்ளூர் கலைஞர்களுக்கு ஓராண்டுக்கு பொழுதுபோக்கு வரி விலக்கு – மந்திரி புசார்

ஷா ஆலம், ஏப்ரல் 8 – இந்த ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை அமலுக்கு வரும் மேடை நிகழ்ச்சி நுழைவு கட்டணங்களுக்கான (டிக்கெட்) பொழுதுபோக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த முடிவு பன்னாட்டு கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு பொருந்தாது என்று மந்திரி புசார் டத்தோ ‘ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போதைக்கு நடத்தப்படும் பொழுதுபோக்கு நிகழ்வுக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதையும் மாநில அரசு தெரிவிக்க விரும்புகிறது.

“(டிக்கெட் அல்லாத) நேரலை இசைக்குழுக்களுக்கான பொழுதுபோக்கு வரிக் கட்டணமும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

புதன்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் (எம்எம்கேஎன்) இந்த முடிவு எடுத்ததாக அவர் கூறினார்.

மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, ​​சிலாங்கூர் எஞ்சிய காலத்திற்கான கேளிக்கை வரிகளைக் குறைக்குமா அல்லது விலக்கு அளிக்குமா என்பது குறித்த முடிவு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் தரவு மற்றும் தெளிவுக்காக இந்த விஷயத்தை எம்எம்கேஎன் இல் முன்கூட்டியே விவாதிக்க வேண்டும் என்று மந்திரி புசார் கூறியிருந்தார்.


Pengarang :