ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் இந்தியச் சமூகத் தலைவர்கள் சேவைகளையும் மதித்து வெ.1000 உதவித்தொகை

ஷா ஆலம்  ஏப்ரல் 8 ;- இவ்வாண்டு மாநில அரசின் நோன்பு பெருநாள் உதவித் தொகை அரசு ஊழியர்களின் பங்களிப்பை மட்டும் அங்கீகரிக்கும் வகையில் இல்லாமல், மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு அவசர உதவிகளை ஏற்பாடு செய்த பள்ளிவாசல் மற்றும் சமயப்பள்ளி முன்களப் பணியாளர்களுக்கு 500 வெள்ளிகளும் வழங்கப்படும் என்றார் மந்திரிபுசார்.

அதே வேளையில் மக்கள் அவசர உதவித்திட்டங்களில் சேவையாற்றிய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பூர்வீகக் கிராமங்களின் தலைவர் செயலாளர்கள், சீனப் புதுக்கிராமத் தலைவர்கள், சிலாங்கூர் இந்தியச் சமூகத் தலைவர்கள் மட்டுமின்றி, WBS என்னும் மகளிர் ஆற்றல் உயர்வுக்குப் பயிற்சியாளர்களாகச் சேவையாற்றி வருபவர்களுக்கும் ஆயிரம் ரிங்கிட் உதவி தொகையை வழங்குவதாக அவர் கூறினார்..

நோன்பு பெருநாளுக்கு முன்னதாக அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி அவர்களுக்கு மாநில அந்தச் சிறப்பு உதவித் தொகையை வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருன் ஷாரி தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு உதவித் தொகை திட்டத்திற்காக 3 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


Pengarang :