ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

யாயாசான் சிலாங்கூர் ஆதரவில் கல்வியைத் தொடர் 318 வசதி குறைந்த மாணவர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஏப் 12- யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 318 முதலாம் படிவ மாணவர்கள் 2022/2023 பள்ளித் தவணையில் கல்வியைத் தொடர்வதற்குரிய வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுவதாக யாயாசான் சிலாங்கூர் அறிக்கை ஒன்றில் கூறியது.

ஆறாம் ஆண்டு வகுப்பு நிலையிலான மதிப்பீட்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தது டி.பி.3 எனப்படும் மூன்றாம் நிலை மதிப்பீட்டு புள்ளிகளைப் மாணவர்கள் பெற்றிருப்பது அவசியம் என்று அது தெரிவித்த து.

இந்த திட்டத்திற்கு இம்முறை 3,838 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அனைத்து விண்ணப்ப பரிசீலனை நடைமுறைய யாவும் இயங்கலை வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூரில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதியும் சிலாங்கூரிலுள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்களும் ஏப்ரல் 11 ஆம்  தேதியும் பதிவு செய்ய வேண்டும்.

யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் ஏற்பாட்டு ஆதரவைப் பெற்ற மாணவர்கள் தங்கும் விடுதி, உபகாரச் சம்பளம், கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளைப் பெறுவர்.


Pengarang :