ECONOMYMEDIA STATEMENTPBT

எம்பிஎஸ்ஏ கீழ் 53,000 காகித பார்க்கிங் கூப்பன்கள் இ-கூப்பன்களாக மாற்றப்பட்டன

ஷா ஆலம், ஏப்.13: நேற்றைய நிலவரப்படி ஷா ஆலம் சிட்டி கவுன்சிலின் (எம்பிஎஸ்ஏ) கீழ் மொத்தம் 53,000 காகித பார்க்கிங் கூப்பன்கள் மின் கூப்பன்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (SSP) இணைய பயன்பாடாக மாற்றியதில் RM35,000 மதிப்புள்ள பரிவர்த்தனை நடந்ததாக ஷா ஆலம் மேயர் டத்தோ ஜமானி அகமட் மன்சோர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

“ஷா ஆலம் நிர்வாகப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காகித கூப்பனை இ-கூப்பனாக மாற்றுவது குறித்த கேள்வி மட்டுமே எழும்பியுள்ளது, எந்த புகாரும் வரவில்லை,” என்று அவர் கூறினார்.

இப்போது வரை பணம் செலுத்துவதற்கு காகித பார்க்கிங் கூப்பன்களைப் பயன்படுத்தும் ஒரு சில குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

ஏப்ரல் 1 முதல், சிலாங்கூரில் உள்ள அனைத்து உள்ளூர் நிர்வாகங்களும் கார் பார்க்கிங் கட்டணங்கள் முழுவதுமாக இ-கூப்பன் முறையைப் பயன்படுத்துகின்றன.

எனவே, பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு கூகுள் பிளேஸ்டோர், ஏப்ஸ்டோர் அல்லது ஹூவாய் ஸ்டோர் ஆகிய தளங்கள் வாயிலாக எஸ்எஸ்பி செயலியைப் பதிவிறக்கம் செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மார்ச் 24 அன்று, ஊராட்சி மன்றத்திற்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர், காகித கூப்பன் வைத்திருப்பவர்கள், கூப்பனின் மீதமுள்ள மதிப்பை மார்ச் 26 முதல் கிரெடிட்டிற்கு மாற்ற, எஸ்எஸ்பி பயனர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்,

இந்த முறையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இழப்புகளை எதிர்கொண்ட நுகர்வோரின் கவலைகளை கருத்தில் கொண்டு காகித கூப்பன்களை எஸ்எஸ்பி கிரெடிட்டிற்கு மாற்ற முயற்சியை செய்ததாக இங் ஸீ ஹான் கூறினார


Pengarang :