ECONOMYMEDIA STATEMENTPBT

ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிக்க கோத்தா அங்கெரிக் சட்டமன்றம் RM80,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப்ரல் 20: ஜோம் ஷாப்பிங் ஹரி ராயா பெருநாள் பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்காக கோத்தா அங்கெரிக் சட்டமன்றம் மொத்தம் RM80,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறியதாவது, மொத்தத்தில் 800 குறைந்த வருமானம் பெற்றவர்கள் (பி40) நேற்று பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்.

“பி40 பிரிவில் இருந்து மொத்தம் 800 பெறுநர்கள் RM100 மதிப்புள்ள ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுள்ளனர்” என்று அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

33,400 பி40 குடும்பத் தலைவர்கள் பயனடைந்த ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிப்பதற்காக சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு RM33.4 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நீண்ட கால முயற்சியாக ஏழைகளை இலக்காகக் கொண்டு ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :