ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

சுபாங் ஜெயாவில் டிங்கி நோய்த்தொற்று ஏப்ரல் மாத நிலவரப்படி 200 க்கும் மேற்பட்ட சம்பவங்களாக அதிகரித்துள்ளது

சுபாங் ஜெயா, ஏப்ரல் 20: ஜனவரி முதல் ஏப்ரல் 9 வரையில் கடந்த ஆண்டு  இதே காலக் கட்டத்தில் இருந்ததை விட சுபாங் ஜெயாவில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேற்பட்ட சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

பெட்டாலிங்கில் மாவட்டத்திலுள்ள ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயாவை விட சுபாங் ஜெயா பகுதியில் சம்பவங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், இந்த அதிகரிப்பு கவலையளிக்கிறது என்று அதன் மேயர் டத்தோ ‘ஜோஹாரி அனுவார் கூறினார்.

“கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 581 டிங்கி காய்ச்சல் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது அதாவது ஏப்ரல் 9, 2022 வரை, 826 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இன்று எம்பிஎஸ்ஜே தலைமையகத்தில் நடந்த சுபாங் ஜெயா நகர சபையின் (எம்பிஎஸ்ஜே) முழு கூட்டத்திற்குப் பிறகு, “எஸ்எஸ்19/1, யுஎஸ்ஜே 2/5 மற்றும் தாமான் பிங்கிரான் யுஎஸ்ஜே 1 ஆகிய மூன்று டிங்கி ஹாட்ஸ்பாட் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

சம்பவங்கள் குறைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது துறை ஒவ்வொரு நாளும் கண்காணிப்பு மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

“டிங்கி நோயாளிகள் உள்ள பகுதிகளில் பின் புறங்களில் பல கொசு இனப்பெருக்க இடங்களைக் கண்காணிப்பு முடிவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றை சுத்தம் செய்வதற்கான சிறப்பு நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்.

 

கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ள நீர் தேக்கங்களைத் தவிர்க்க, குடியிருப்பாளர்கள் 10 நிமிடம் தங்கள் வீடுகளின் பகுதியை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.


Pengarang :