ECONOMYMEDIA STATEMENTPBT

நான்கு இடங்களில் மாநில அரசின் பரிவுமிக்க வணிகத் திட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப்ரல் 20: அடிப்படைத் தேவைகளை மலிவான விலையில் விற்கும் மாநில அரசின் பரிவுமிக்க வணிகத் திட்டம் இந்த வார இறுதியில் நான்கு இடங்களில் தொடரும்.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பிஎல்பி கடை முன்புறம், பாரிட் 1, சுங்கை சீரே, தஞ்சோங் காராங் மற்றும் பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்றச் சமூகச் சேவை மைய வளாகத்தில் இத்திட்டம் நடைபெறும் என்று சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) அறிவித்தது.

இதற்கிடையில், அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை அங்கேரிக் மஜூ கடை, கம்போங் தஞ்சோங் சியாம், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளானில் உள்ள கோத்தா ராஜா மசூதிக்கு அடுத்துள்ள கார் நிறுத்துமிடத்தில் நடைபெறும்.

“விற்பனை இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொருட்களை மலிவாக வாங்கி சேமிக்க இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்,” என்று இன்று பேஸ்புக் மூலம் நிறுவனம் தெரிவித்தது.

பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து மக்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 64 பகுதிகளில் வார இறுதியில் மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டம் நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியின் போது மொத்தம் 10,000 கோழிகள், 3,100 கிலோகிராம் புதிய மாட்டு இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மீன்கள் மற்றும் 315,000 தர பி முட்டைகளும் விற்பனை செய்யப்பட்டன.

திட்டத்தின் மூலம், சுமார் 1 1\2 கிலோ எடைகொண்ட ஓரு கோழி RM12 க்கும், புதிய மாட்டு இறைச்சி (ஒரு கிலோவுக்கு RM35), கிரேடு பி முட்டைகள் (30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டை) RM10 க்கும் மற்றும் கானாங்கெளுத்தி அல்லது செலாயாங் (பேக்கிற்கு RM8) விற்கப்படுகிறது.

 


Pengarang :