ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பலர் கிராமத்திற்குத் திரும்புவதால், சிலாங்கூரில் குப்பை 30 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 28: சிலாங்கூரில் ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்காக மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், சியாவலின் முதல் வாரத்தில் வீட்டுக் கழிவுகள்  30 விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமத்திற்கு சென்று ஹரி ராயா பெருநாளைக் கொண்டாட வாய்ப்பு இல்லாதவர்களையும் இந்த திட்டம் கணக்கில் எடுத்துள்ளது என்று கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) நிர்வாக இயக்குனர் முகமட் ரம்லி தாஹிர் கூறினார்.

“சிலாங்கூரில் உள்ள 65 லட்சம் மக்களில் இருபது லட்சம் மக்கள் நாளை முதல் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி  ராயா   கொண்டாடுவார்கள், எனவே அடுத்த வாரத்தில் உருவாகும் குப்பைகள் வெகுவாகக் குறையக்கூடும்.

“வழக்கமாக, துப்புரவு ஒப்பந்ததாரர்கள் ஒரு நாளைக்கு 6,000 முதல் 8,000 டன் குப்பைகளை சேகரிக்கின்றனர்,” என்று அவர் இன்று ஷா ஆலம் கன்வென்ஷன் சென்டரில் ஊடகவியலாளர்களுடன் நடந்த இஃப்தார் விழாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டை விட ரமலான் காலத்தில் மாநிலத்தில் வீட்டுக் குப்பை சேகரிப்பு 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை உணவுக் குப்பைகள் என்றும் அவர் கூறினார்.

“இந்த ரமலான் பஜாரில் உணவு கழிவுகள் வீணாவது மிகவும் வருத்தமான விஷயம்,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :