ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெஅடிலான் தேர்தல் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும்- சைபுடின் கருத்து

பெட்டாலிங் ஜெயா, மே 8- விரைவில் நடைபெறவிருக்கும் 2022/2024 ஆம் ஆண்டு தவணைக்கான கெஅடிலான் தேர்தல் கட்சியில் பிளவை ஏற்படுத்தாது. மாறாக, கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்.

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் 15வது பொதுத் தேர்தலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற பட்சத்தில் கட்சித் தேர்தலை கெஅடிலான் தலைமைத்துவம் நடத்தாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

பிளவு ஏற்படும் என மக்கள் கூறும் நிலையில் எதற்காக நாம் கட்சித் தேர்தலை நடத்துகிறோம்? எதற்காக பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறு செய்கிறோம்? நாம் பிளவுபட்டு பலவீனமாக இருக்கும் நிலையில் எவ்வாறு பொதுத்தேர்லை எதிர் கொள்ளப்போகிறோம்?

கெஅடிலான் என்பது ஒரு சீர்திருத்தக் கட்சி. நாம் கட்சியில் ஜனநாயகத்தை நிலை நாட்டி வருகிறோம். கட்சி உறுப்பினர்கள் மத்தியில் காணப்படும் நட்புறவையும் சகோதரத்துவதையும் தேர்தல் ஒருபோதும் பாதிக்காது என்பதை நிரூபிக்க விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

கெஅடிலான் கட்சியின் நிர்வாகச் சுமைகளை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவராக சுமப்பதைக் காண நாம் விரும்பவில்லை. ஷெரட்டோன் நகர்வு காரணமாக கட்சியில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார் என சைபுடின் தெரிவித்தார்.

அனைத்து சுமைகளையும் தலைவர் மீது சுமத்துவது நியாயமில்லை. முடிவுகள் தங்களுக்குச் சாதமாக இல்லாத போது தலைவரை குறைகூறுவார்கள். ஆகவே, தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக காலியாக உள்ள அனைத்து கட்சிப் பதவிகளும் முழுமையாக நிரப்பப்படுவது அவசியம் என்றார் அவர்.


Pengarang :