ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப்  போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது

கோலாலம்பூர், மே 8- நாட்டிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் வரை வாகனப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது.

வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் சாலைகளின் ஒரிரு பகுதிகளில் மட்டும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கிழக்குக் கரை மாநிலங்களிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிச் செல்லும் சாலையில் காராக் முதல் புக்கிட் திங்கி வரையிலான 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெரிசல் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

வடக்கு மற்றும் தெற்கிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு வரும் தடங்களில் போக்குவரத்து சீராக உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் அடிக்கடி நெரிசல் ஏற்படும் பகுதிகளில் வழக்கம் போல் நெரிசல் காணப்பட்டது.

குறிப்பாக, ஈப்போ செலத்தான் முதல் சிம்பாங் பூலாய் வரையிலானப் பகுதி, குவா தெம்புரோங் முதல் தாப்பா வரையிலானப் பகுதி, பீடோர் முதல் சுங்கை வரையிலானப் பகுதி, சுங்கை புவாயா முதல் ரவாங் வரையிலானப் பகுதி ஆகியவற்றில் நெரிசல் காணப்படுகிறது என்று  அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தென் பகுதியை பொறுத்த வரை சிம்பாங் அம்பாட் முதல் பெடாஸ் லிங்கி வரையிலானப் பகுதி, சிரம்பான் ஓய்வுப் பகுதி முதல் போர்ட்டிக்சன் வரையிலானப் பகுதியில் நெரிசல் காணப்படுவதாகவும் அவர் சொன்னார்.

நேற்றிரவு தொடங்கிய இலவச டோல் கட்டண சலுகை இன்றிரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது.


Pengarang :