ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

தென்மேற்கு பருவ மழை சனிக்கிழமை தொடங்கும்- வானிலை ஆய்வுத் துறை கணிப்பு

கோலாலம்பூர், மே 10- இவ்வாண்டிற்கான தென்மேற்கு பருவமழை வரும் சனிக்கிழமை தொடங்கி செப்டம்பர்  ‘மாத மத்திய பகுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை கூறியது.

இக்காலக்கட்டத்தில் குறைந்த ஈரப்பதம் கொண்ட காற்று மேற்கு திசையிலிருந்து சீராக வீசும் என்பதோடு வளிமண்டலச் சூழலும் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா கூறினார்.

இதன் காரணமாக வானில் மேகங்கள் சூழ்வது குறைந்து நாடு முழுவதும் மழை பெய்யும் நாட்களில் எண்ணிக்கையும் குறையும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

புயல் மையக்காடு உருவாக்கம் காரணமாக தீபகற்ப மலேசியாவின் மேற்கரையிலும் மேற்கு சபாவிலும் அதிகாலை தொடங்கி பல மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என்று அவர் சொன்னார்.

இக்காலக்கட்டத்தில் குறிப்பாக ஆகஸ்டு முதல்  அக்டோபர் வரை திறந்த வெளி தீயிடல் சம்பவங்களைத் தடுக்காவிட்டால் புகை மூட்டப் பிரச்னை உண்டாவதற்குரிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்காலக்கட்டத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படியும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :