ECONOMYMEDIA STATEMENT

கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஈப்போ, மே 10 – கிரி மற்றும் ஜெலியை இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் செல்லும் வாகனமோட்டிகள், சமீபகாலமாக விலங்குகளின் பல காணொளி பதிவுகளைச் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

சாலையில் யானைகள் நடந்து செல்லும்போது வாகனமோட்டிகள் அந்த யானைகள் காட்டுக்குள் திரும்பிச் செல்லும்வரை, வாகனத்தில் அமைதியாகக் காத்திருக்குமாறு பேராக் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா பாதுகாப்பு துறை (பெர்ஹிலிதான்) இயக்குனர் யூசோஃப் ஷெரீப் கேட்டுக் கொண்டார்.

” வாகனமோட்டிகள் சாலையில் யானைகளைத் தூண்டிவிடவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“ஏனென்றால் யானைத் தன்னை அணுகும் மக்களைத் தாக்கும் பெரும் சாத்தியம் உள்ளது, இது முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போலக் காயம் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்,” என்று அவர் பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியின் அடிப்படையில், தித்திவாங்சா மலைத்தொடருக்கு அருகிலுள்ள ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு (R&R) பகுதியில் அடிக்கடி உணவு தேடி அலைவது இதே யானைதான் என்று பெர்ஹிலிதான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, அப்பகுதியில் காணப்பட்ட யானைகளின் நடமாட்டம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிர பட்டிருந்தன. அந்த காணொளியில், சில வாகனமோட்டிகள் யானையை நெருங்கிச் செல்வதையும், யானையை அழைப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.


Pengarang :