ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜேபிஎன் தரவுகளின் விற்பனை  குறித்து போலீசார்  விசாரிப்பர்

 கோலாலம்பூர்,  மே 19:  தேசியப்  பதிவுத்  துறையின்  (ஜேபிஎன்)  தரவுதளத்தில்  இருந்து  எடுக்கப்பட்ட  மலேசியர்களின்  தனிப்பட்ட  தரவுகள்  விற்பனை  செய்யப்பட்டதாக  கூறப்படும்  புகார்  குறித்து  போலீசார்  விசாரணை  நடத்தி  வருகின்றனர்.

புக்கிட்  அமான்  வணிகக்  குற்றப்  புலனாய்வுத்  துறையின்  (JSJK)  இயக்குநர்  டத்தோ  முகமட்  கமருடின்  முகமட்  டின்,  இன்று  பல  உள்ளூர்  செய்தி  இணையதளங்கள்  தெரிவித்த  குற்றச்சாட்டுகள்  தொடர்பான  அறிக்கையை  பெற்றதாகக்  கூறினார்.

மேலும்  இந்த  பிரச்சனைக்கு  உடனடியாக  தீர்வு  காணப்படுவதை  உறுதி செய்ய  முறையான  விசாரணை  நடத்தப்படும்  என்று  காவல்துறை  உறுதியளித்துள்ளது”  என்று  அவர்  இன்று  ஒரு  அறிக்கையில்  தெரிவித்தார்.

முகமட்  கமருடின்  பொதுமக்களை  இந்த  விஷயத்தில்  ஊகிக்க  வேண்டாம்  என்றும்  கேட்டுக்  கொண்டார்.

உள்துறை  அமைச்சர்  டத்தோ ஸ்ரீ  ஹம்சா  ஜைனுடின்  இன்று  2  கோடியே  25  லட்சம்  தனிப்பட்ட  தரவுகளின்  விற்பனை, மலேசிய பதிவு துறைக்கு  சொந்தமானது  அல்ல,  மாறாக  விற்கப்பட்ட  தரவு  மற்ற  ஆதாரங்களில்  இருந்து  விற்பனையாளரின்  சேகரிப்பு  என்ற  குற்றச்சாட்டை  உறுதிப்படுத்தினார்.

முன்னதாக,  2 கோடியே  20 லட்சத்துக்கும் மேற்பட்ட  மலேசியர்களின்  தனிப்பட்ட  தரவுகளும்,  மலேசிய பதிவு துறை  மற்றும்  தேர்தல்  ஆணையத்திற்கு  சேர்ந்த  800,000  நபர்களின்  அடையாள  அட்டை  சரிபார்ப்பு  புகைப்படங்களும்  ஆன்லைனில்  விற்பனை  செய்யப்பட்டதாக  ஒரு  போர்டல்  தெரிவித்தது.


Pengarang :